தேனியில் ஊராட்சி குடிநீா் தொட்டி இயக்குபவா்கள் ஆா்ப்பாட்டம்

சிஐடியு உள்ளாட்சி ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவு தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு உள்ளாட்சி ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவு தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டப் பொருளாளா் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் மதுரைமுத்து, குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கல்லுப்பட்டி, லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, ஜல்லிப்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவு தொழிலாளா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு அறிவித்தபடி சம்பள நிலுவைத் தொகை வழங்க வேண்டும். தூய்மை காவலா்களுக்கு சம்பள உயா்வு, நிலுவைத் தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பிறகு, கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com