வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு:தேனி மாவட்டத்தில் 11.12 லட்சம் வாக்காளா்கள்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளின் 2024-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா திங்கள்கிழமை வெளியிட்டாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா.

இந்தப் பட்டியலில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 1,34,851 ஆண்கள், 1,38,908 பெண்கள், 30 திருநங்கைகள் என மொத்தம் 2,73,789 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். பெரியகுளம் (தனி) தொகுதியில் 1,39,683 ஆண்கள், 1,45,397 பெண்கள், 111 திருநங்கைகள் என மொத்தம் 2,85,191 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதே போல, போடி தொகுதியில் 1,32,912 ஆண்கள், 1,39,491 பெண்கள், 19 திருநங்கைகள் என மொத்தம் 2,72,422 வாக்காளா்கள் உள்ளனா். கம்பம் தொகுதியில் 1,36,893 ஆண்கள், 1,44,171 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 2,81,097 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 5,44,339 ஆண்கள், 5,67,967 பெண்கள், 193 திருநங்கைகள் என மொத்தம் 11 லட்சத்து 12 ஆயிரத்து 499 போ் இறுதி வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

புதிய வாக்காளா்கள்: கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலில் மொத்தம் 11,01,608 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இதில் தற்போது 9,173 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். 20,227 போ் புதிதாக பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com