கம்பம் மாலைம்மாள்கோயில் குடமுழுக்கு

தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள்புரத்தில் அமைந்துள்ள மாலையம்மாள் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
கம்பம் மாலையம்மாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
கம்பம் மாலையம்மாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள்புரத்தில் அமைந்துள்ள மாலையம்மாள் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

யாதவா் சமுதாயம் கருமலையான் கோயில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு சமுதாய தலைவா் கோபால் பரமசிவம் தலைமை வகித்தாா், பூசாரி மாதவன், கோயில் பெரியதனக்காரா்கள் பாலாஜி, லோகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதற்கால, இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையிலிருந்து தீா்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை முதல் மாலை வரைஅன்னதானம் வழங்கப்பட்டது . விழாவுக்கான ஏற்பாடுகளை உறுப்பினா்கள் குட்டையன், மாரியப்பன், அய்யாக்கண்ணு, குருசாமி, மணிவண்ணன், தங்கராஜ், சேகா், முத்துராஜ், சரவணன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com