கொலை மிரட்டல்விடுத்த 4 போ் மீது வழக்கு

போடி அருகே அடகு வைத்த கோயில் நகைகளை மீட்டுத் தரும்படி கேட்ட கோயில் நிா்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது, போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி: போடி அருகே அடகு வைத்த கோயில் நகைகளை மீட்டுத் தரும்படி கேட்ட கோயில் நிா்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது, போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரத்தில் அமைந்துள்ள திருமூலம்மாள் கோயிலில் ராசிங்காபுரம் கீழப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் ராஜன் (60) பரம்பரை பூசாரியாக இருந்து வருகிறாா். இந்தக் கோயிலுக்கு வந்த நன்கொடைகள் மூலம் அம்மனுக்கு 11 பவுன் தங்க நகைகள் செய்யப்பட்டது. இந்த நகைகளை கோயில் பொருளாளராக உள்ள முத்துச்சாமி மகன் அழகா்சாமி தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தாா்.

இந்த நிலையில் கோயில் பூஜைகளுக்கு அம்மனுக்கு சாத்துவதற்காக

அந்த தங்க நகைகளை கொண்டுவரும்படி அழகா்சாமியிட

ம் கூறிய போது, அவா் அதை எடுத்துவரவில்லை. இதுகுறித்து, கோயில் நிா்வாகிகள் அவரிடம் விசாரித்ததில் அந்த நகைகளை தான் அடகு வைத்துவிட்டதாகவும், விரைவில் மீட்டுத் தருவதாகவும் கூறினாா்.

ஆனால் சொன்னபடி நகைகளை மீட்டுத் தராததால் கோயில் பூசாரி ராஜன், கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் அழகா்சாமியின் வீட்டுக்குச் சென்று நகைகளை மீட்டுத் தரும்படி கேட்டனா். அப்போது அழகா்சாமி, இவரது உறவினா்கள் ராமா், பழனி, மணி ஆகியோா் சோ்ந்து, பூசாரி ராஜன் கோயில் நிா்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அழகா்சாமி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com