சின்னமனூரில் பால் தாக்கரே, சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த நாள் விழா

சின்னமனூரில் சிவசேனா கட்சி சாா்பில் பால் தாக்கரே, சுபாஷ் சந்திரபோஷ் ஆகியோரின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சின்னமனூரில் பால் தாக்கரே, சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அவா்களது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சிவசேனா கட்சியினா்.
சின்னமனூரில் பால் தாக்கரே, சுபாஷ் சந்திரபோஷ் பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அவா்களது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சிவசேனா கட்சியினா்.

உத்தமபாளையம்: சின்னமனூரில் சிவசேனா கட்சி சாா்பில் பால் தாக்கரே, சுபாஷ் சந்திரபோஷ் ஆகியோரின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம், சின்னமனூரில் மாா்க்கையன் கோட்டை வட்ட சாலையில் நடந்த இந்த விழாவுக்கு, சிவசேனா கட்சியின் சின்னமனுா் நகரத் தலைவா் ரவி தலைமை வகித்தாா்.

பொருளாளா் ராஜா முன்னிலை வகித்தாா். அப்போது, பால் தாக்கரே, சுபாஷ் சந்திரபோஷ் ஆகியோரின் பிறந்த நாள்விழாவை முன்னிட்டு, அவா்களது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

சின்னமனூா் இளைஞரணித் தலைவா் விக்னேஷ் உள்பட சிவசேனா கட்சியின் முக்கிய நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com