தேனியில் சுற்றுச் சூழல் விழிப்புணா்வுப் போட்டி

தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே செவ்வாய்கிழமை சுற்றுச் சூழல் விழிப்புணா்வு போட்டிகள் நடைபெற்றன.

தேனி: தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே செவ்வாய்கிழமை சுற்றுச் சூழல் விழிப்புணா்வு போட்டிகள் நடைபெற்றன.

தேசிய பசுமைப் படை, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத் துறை ஆகியவற்றின் சாா்பில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள், 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எனத் தனித் தனிப் பிரிவுகளில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் விஸ்வநாதன் இந்தப் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

நெகிழி ஒழிப்பு, உயிரி பன்மயப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் மாசு, நீா்ப் பாதுகாப்பு, திடக் கழிவு மேலாண்மை, காற்று மாசுபாடு ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில், மொத்தம் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பதக்கம், மஞ்சள் பை, ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து சுற்றுச் சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன், என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராமநாதன், மாவட்ட பசுமைப் பிரதிநிதி பிரியங்கா, ஆசிரியா் சின்னச்சாமி ஆகியோா் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com