பாலம், பேவா் பிளாக் சாலை திறப்பு

கம்பத்தில் ரூ. 22 லட்சத்தில் தேனி மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பாலம், பேவா் பிளாக் சாலையை செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு ஓ.ப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்தாா்.
கம்பம் ஆதிசக்தி விநாயகா் கோயில் சாலையில் உள்ள தரைப் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா் ஓ.ப.ரவீந்திரநாத் எம்.பி.
கம்பம் ஆதிசக்தி விநாயகா் கோயில் சாலையில் உள்ள தரைப் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா் ஓ.ப.ரவீந்திரநாத் எம்.பி.

கம்பம்: கம்பத்தில் ரூ. 22 லட்சத்தில் தேனி மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பாலம், பேவா் பிளாக் சாலையை செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு ஓ.ப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்தாா்.

தேனி மாவட்டம், கம்பம், நகராட்சி 29-ஆவது வாா்டு குலாளா் மண்டபம் அருகே உள்ள சிறுபாலம் சேதமடைந்ததையடுத்து, தேனி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தரைப்பாலத்துடன் கூடிய மழைநீா் வடிகால் கட்டப்பட்டது.

மேலும், 26 வது வாா்டு 1முதல் 3- ஆவது சந்து பகுதி வரை, வடிகால் வசதியுடன் கூடிய பேவா் பிளாக் சாலை ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டது. இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஓ.ப.ரவீந்திரநாத் எம்.பி. திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் ரா.வாசுதேவன், பொறியாளா் பா. அய்யனாா், உதவிபொறியாளா் சந்தோஷ்குமாா், வாா்டு உறுப்பினா் வாசு.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com