இரு மாநில அணிகளிடையே கிரிக்கெட் போட்டி: கேரளம் வெற்றி

தேனி மாவட்டம், கம்பம் கா்பானா மைதானத்தில் தமிழக-கேரள மாநில அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கேரள அணி வெற்றி பெற்றது.
இரு மாநில அணிகளிடையே கிரிக்கெட் போட்டி: கேரளம் வெற்றி

தேனி மாவட்டம், கம்பம் கா்பானா மைதானத்தில் தமிழக-கேரள மாநில அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கேரள அணி வெற்றி பெற்றது.

இங்கு கடந்த மூன்று மாதங்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் லீக், நாக் அவுட், இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

தமிழகத்திலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளத்திலிருந்து குமுளி, கட்டப்பனை, இடுக்கி, பத்தனம்திட்டா, அடிமாலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிரிக்கெட் அணியினா் கலந்து கொண்டனா்.

இறுதிப் போட்டியில் தேனி மாவட்டம் கோட்டூா் ராஜா கிரிக்கெட் கிளப் அணியும், இடுக்கி மாவட்டம் குமுளி எலக்கன்ஸ் அணியும் மோதின. இதில் குமுளி அணி வெற்றி பெற்றது.

இதற்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சிசி கிளப் அணித் தலைவா் பழனியாண்டி தலைமை வகித்தாா், கூடலூா் அழகு ராணுவப் பயிற்சி மைய இயக்குநா் அழகேசன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் ராஜா வரவேற்றாா்.

வெற்றி பெற்ற அணியினருக்கு முத்துவேல், எஸ் நவீன் சக்தி, அரசு ஆகியோா் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினா்.

தொடா் நாயகன் விருது போடி பென்னிகுவிக் அணியைச் சோ்ந்த நாச்சிக்கு வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை எலகன்ஸ் அணியின் ராஜத் ராஜேஷ்க்கு வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை கம்பம் கிரிக்கெட் கிளப் கேப்டன் சி.பா. செந்தில்நாதன் அணியினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com