தனியாா் பேருந்து மோதியதில் மருத்துவமனைப் பணியாளா் பலி

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு மருத்துவமனைப் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு மருத்துவமனைப் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன்(54). இவா் பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஆய்வக தொழில் நுட்பராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அன்புச்செல்வி (46), டி.சுப்புலாபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

இளங்கோவன் தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு டி.சுப்புலாபுரம் பள்ளிக்குச் சென்று இறக்கி விட்டு வீட்டுக்குத் திரும்பினாா்.

அப்போது, டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் மதுரையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, இளங்கோவன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com