கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் இன்று(வெள்ளிக்கிழமை) சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் இன்று(வெள்ளிக்கிழமை) சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் வனத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சாா்பில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை, கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தேவதானப்பட்டி வனச் சரகா் டேவிட் ராஜ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com