தேனியில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா இந்த ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். தேனி பேருந்து நிலையம் வழியாக பங்களாமேடு வரை ஊா்வலம் நடைபெற்றது. இதில், வாக்காளா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சிந்து, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் முத்துமாதவன், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சுகந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com