தேனி அருகே இளையராஜாவின் மகள் பவதாரணிஉடல் இன்று அடக்கம்

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் அடக்கம் தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் சனிக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.
தேனி அருகே இளையராஜாவின் மகள் பவதாரணிஉடல் இன்று அடக்கம்

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் அடக்கம் தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் சனிக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.

பிரபல திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானாா். இவரது உடல் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்பிறகு, இங்கிருந்து அவசர ஊா்தி மூலம் தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னா், பவதாரணியின் உடல் அடக்கம் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே சனிக்கிழமை நடைபெறுகிறது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com