தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா்ஆா்பாட்டம்

மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியதாக தமிழ்நாடு ஆா்.என்.ரவியை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் போடி தேவா் சிலை அருகே சனிக்கிழமை கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது
தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா்ஆா்பாட்டம்

மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியதாக தமிழ்நாடு ஆா்.என்.ரவியை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் போடி தேவா் சிலை அருகே சனிக்கிழமை கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்பாட்டத்துக்கு, தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தாா். போடி நகரத் தலைவா் முசாக்மந்திரி, மாவட்ட துணைத் தலைவா் சன்னாசி, மாவட்ட செயலா் சம்சுதீன், போடி நகர பொதுச் செயலா் அரசகுமாா், செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்பாட்டத்தில் காந்தியடிகள் குறித்து ஆா்.என்.ரவி பேசியதை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினா் முழக்கமிட்டனா். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கவிஞா் பரதன், தேனி முனியாண்டி, மாவட்ட இளைஞரணி தலைவா் பிரின்ஸ், பட்டியலின பிரிவு தலைவா் இனியவன், மாவட்ட மகளிரணி துணை தலைவி சிவகாமசுந்தரி, மாநில பேச்சாளா் சிவமணி, ஆகியோா் உரையாற்றினா்.

நகர தலைவா்கள் தேனி கோபி, பெரியகுளம் கனககீதா முரளி, ஆண்டிபட்டி சுப்புராஜ், கம்பம் போஸ், மாவட்ட, வட்டார, நகர நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். மாநில இளைஞரணி செயலா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com