புதிய நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

ஆண்டிபட்டியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதித் துறை அலுவலா் குடியிருப்புக் கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள சனிக்கிழமை,
புதிய நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

ஆண்டிபட்டியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதித் துறை அலுவலா் குடியிருப்புக் கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள சனிக்கிழமை, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.தனபால் தொடங்கி வைத்தாா்.

ஆண்டிபட்டியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதித் துறை அலுவலா் குடியிருப்புக் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த 2023, ஆக.9-ஆம் தேதி அரசு அனுமதி வழங்கி ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மொத்தம் 22 ஆயிரத்து 581 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களாக அமையவுள்ள நீதிமன்ற கட்டடம், மொத்தம் 1,930 சதுர அடியில் தனித் தனியே அமையவுள்ள நீதித் துறை அலுவலா்கள் குடியிருப்பு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.தனபால் அடிக்கால் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.அறிவொளி, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய நீதிமன்ற கட்டடத்தின் தரைத் தளத்தில் குற்றவியல் நீதிமன்றம், முதல் தளத்தில் நீதிமன்ற அலுவலகங்கள், 2-ஆம் தளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வழக்குரைஞா்கள் அறை, உணவுக் கூடம், காத்திருப்போா் அறை, கைதிகள் அறை, கழிப்பறை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com