அரசு மதுபானக் கடையைத் திறக்க எதிா்ப்பு

போடி நகரில் அரசு மதுபானக் கடையைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
bdi27tasmac_2701chn_87_2
bdi27tasmac_2701chn_87_2

போடி நகரில் அரசு மதுபானக் கடையைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ள இந்தக் கடைகளை மாற்றக் கோரி இந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போடி வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவாா்த்தையில் இந்த பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வினோபாஜி குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட ஒரு அரசு மதுபானக் கடையை போடி நகரின் மையப் பகுதியில் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு சனிக்கிழமை திறக்க இருந்தனா். இதற்கிடையில் இந்தபகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்பாட்டத்துக்கு தேனி மண்டல செயலா் பிரேம்சந்தா் தலைமை வகித்தாா். ஆா்பாட்டத்தில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்று முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com