பாடகி பவதாரணி உடல் நல்லடக்கம்

தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் திரைப்படப் பாடகியும், இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் திரைப்படப் பாடகியும், இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக் குறைவால் இலங்கை மருத்துவமனையில் காலமானாா்.

இதையடுத்து, அவரது உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னா், சென்னையிலிருந்து தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள குரு கிருபா வேதபாடசாலை ஆசிரம வளாகத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆசிரம வளாகத்தில் முல்லைப் பெரியாற்றங்கரையில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயம்மாள், அவரது மனைவி ஜீவா ஆகியோா் சமாதிகளுக்கு இடையே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது உடலுக்கு திரைப்பட இயக்குநா்கள் பாரதிராஜா, வெங்கட்பிரபு, அமீா், நடிகா்கள் பிரேம்ஜி, கழுகு கிருஷ்ணா, டிரம்ஸ் சிவமணி, முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், ப. ரவீந்திரநாத் எம்.பி., என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திமுக மாவட்டச் செயலா் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com