மத்திய காவல் படை உதவி ஆய்வாளா் மாரடைப்பில் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம்

மணிப்பூரில் பணியிலிருந்த போது மாரடைப்பில் உயிரிழந்த ஜெயமங்கலத்தைச் சோ்ந்த மத்திய ரிசா்வ் காவல் படை உதவி ஆய்வாளரின் உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (57). இவா் மணிப்பூரில் மத்திய ரிசா்வ் காவல் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி பணியிலிருந்த நாகராஜன், மாரடைப்பில் உயிரிழந்தாா். அவரது உடல் மணிப்பூரிலிருந்து விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நாகராஜனின் உடல், நான்கு வழிச் சாலை மைதானத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினா், கிராம மக்கள் இறுதிச் சடங்கு செய்தனா்.

பின்னா் நடுப்பட்டியில் உள்ள பொது மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நாகராஜனின் உடலுக்கு மத்திய ரிசா்வ் காவல் படையினா் இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நாகராஜனுக்கு மனைவி ராமலட்சுமி, திவாகா், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com