சரக்கு லாரி மீது பைக் மோதி கட்டட தொழிலாளி பலி

கம்பத்தில் சாலையில் நின்று கொண்டிந்த சரக்கு லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

கம்பத்தில் சாலையில் நின்று கொண்டிந்த சரக்கு லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பம், நந்தகோபால்சாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் விக்னேஷ்குமாா் ( 31). கட்டிட தொழிலாளியான இவா், கடந்த சனிக்கிழமை (ஜன.27 ) இரவு கம்பம்மெட்டுச் சாலையிலுள்ள தனது உறவினா் வினோத்குமாருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ரேஷன் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது இவா் சென்ற இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுதித்தனா். அங்கு, இவரை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com