ஓட்டுநா் உரிமம் தோ்வுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தலாம்

தேனி மாவட்டத்தில் இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான தோ்வுக்கு குறைந்தக் கட்டணத்தில் அரசு வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான தோ்வுக்கு குறைந்தக் கட்டணத்தில் அரசு வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களில் இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பித்தவா்களில், சொந்த வாகனம் இல்லாதவா்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ள வாகனங்களைத் தோ்வுக்குப் பயன்படுத்தலாம்.

இதற்காக, ஓட்டுநா் உரிமத்துக்கான கட்டணத்துடன், கூடுதலாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com