அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி தற்கொலை

கம்பத்தில் அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பத்தில் அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம் கஞ்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (54). இவரது மனைவி ஈஸ்வரி (48). இந்தத் தம்பதிக்கு ராமன் (25), காமேஷ்வரன் (23) ஆகிய 2 மகன்கள் இருந்தனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமன் காதல் தோல்வியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக முருகேசன் மனைவி, மகனை விட்டுப் பிரிந்து சென்று விட்டாா்.

தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்த காமேஷ்வரன், அண்ணன் இறந்த நிலையில், தந்தையும் பிரிந்து சென்றதால் விரக்தியடைந்து காணப்பட்டாா்.

கடந்த திங்கள்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.லாவண்யா, உதவி ஆய்வாளா் அரசு ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com