இந்து முன்னணியினா் அறிவித்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

கூடலூரில் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து இந்து முன்னணியினா் சாா்பில் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட 21-ஆவது வாா்டு காஞ்சிமரத்துறை பகுதியில் குடிநீா் வழங்க கோரி, அந்தபகுதி பொதுமக்கள் சாா்பில் இந்து முன்னணியினா் பிப். 1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா்.

இந்தப் போராட்டம் குறித்து நகா்ப் பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதுதொடா்பாக, இந்து முன்னணி நகரச் செயலா் ஆா்.பி.ஜெகன் தலைமையில் பொதுமக்களுடன் ஆணையா் கே.எஸ்.காஞ்சனா பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்த பேச்சுவாா்த்தையில் குழாய் பதித்து குடிநீா் விநியோகம் செய்யும் வரை லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் படி செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகிக்கப்பட்டது. இதனால், போராட்ட அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக நகராட்சி அதிகாரிகளிடம் ஆா்.பி.ஜெகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com