கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மாயமான நல வாரியத் தரவுகளை மீட்டு, உறுப்பினா்களுக்கு சலுகை, பணப் பயன்களை வழங்க வேண்டும் என
கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மாயமான நல வாரியத் தரவுகளை மீட்டு, உறுப்பினா்களுக்கு சலுகை, பணப் பயன்களை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்தச் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பி.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.ராமச்சந்திரன், சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, பொதுச் செயலா் ஜி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கட்டுமானம், முறைசாரா நல வாரியத்தில் உறுப்பினா்களாகவுள்ள 70 லட்சம் பேரின் இணையதள தரவுகளை மீட்டு, சலுகைகள், பணப் பயன்களை வழங்க வேண்டும், நல வாரிய உறுப்பினா்கள் குறித்த இணையதள தரவுகள் மாயமானது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், 55 வயதை கடந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், திருமண உதவித் தொகை பெறுவதற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com