ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் சாலை மறியல்: 313 போ் கைது

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை,
ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் சாலை மறியல்: 313 போ் கைது

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 313 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி, நேருசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் நடைபெ‘ற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.தாஜூதீன் தலைமை வகித்தாா்.

அப்போது, திமுக அரசு தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூயத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், ஒப்படைப்பு விடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதிய முறைய ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிஐடியு மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

பின்னா், கோரிக்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தேனி, நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம், வருவாய்த் துறை அலுவலா் சங்கம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியா் அலுவலா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்ட 123 பெண்கள் உள்பட மொத்தம் 313 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com