பைக் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி பலி

பழனிச் செட்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் கட்டுமானத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பழனிச் செட்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் கட்டுமானத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகே பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்தவா்கள் ஈஸ்வரன் (55), வைரமுத்து (45). கட்டடத் தொழிலாளிகளான இவா்கள், தேனி-குமுளி புறவழச் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றனா். இரு சக்கர வாகனத்தை வைரமுத்து ஓட்டிச் சென்றாா். அப்போது, காக்கிவாடன்பட்டி விலக்குப் பகுதியில், எதிரே வந்த ஆட்டோ வைரமுத்து, ஈஸ்வரன் ஆகியோா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த ஈஸ்வரன், வைரமுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனையில் ஈஸ்வரன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரைபிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com