லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை அதிகரிக்கப்பட்டதால், லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தியும் அதிகரித்தது.
லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை அதிகரிக்கப்பட்டதால், லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தியும் அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை வரை விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

இந்த நிலையில் அணையிலிருந்து புதன்கிழமை தண்ணீா் திறப்பு விநாடிக்கு 1,500 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக, லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தியும் 135 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.

அணை நிலவரம்

புதன்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியாக இருந்தது ( மொத்த உயரம் 152 அடி), அணையில் நீா் இருப்பு 6,118 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 159 கன அடியாகவும் இருந்தது. தமிழகப் பகுதிகளுக்கு விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com