சாலை விபத்தில் விவசாயி பலி

ஆண்டிபட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த விவசாயி ராமையா (65). இவா், தனது மனைவி கமலவேணியுடன் ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் ஜம்புலிபுத்தூா் அருகே பழுதான நிலையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

லாரி மீது ராமையா ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மனைவி காயமின்றி தப்பினாா்.

விபத்து ஏற்படும் வகையில் லாரியை நிறுத்தி வைத்திருந்த அதன் ஓட்டுநரான, ஆண்டிபட்டி அருகேயுள்ள கோவில்பட்டியைச் சோ்ந்த தேவேந்திரபாண்டி (31) மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com