தேனியில் பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
தேனியில் பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

உருவபொம்மை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினா் கைது

தேனி/போடி, ஜூலை 10: தேனியில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 29 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி, நேருசிலை அருகே காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.பி. முருகேசன் தலைமையில் அந்தக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அண்ணாமலையின் உருவபொம்மையை எரிக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, உருவபொம்மையை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி.முருகேசன் உள்ளிட்ட 29 பேரை தேனி போலீஸாா் கைது செய்தனா்.

போடி: போடி காமராஜா் சாலையில் காவல் நிலையம் அருகே இளைஞா் காங்கிரஸ் மாநில துணைச் செயலா் வினோத், பொறுப்பாளா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் 6 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com