பேருந்தில் நடத்துநரின் பணப் பை மாயம்

கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் நடத்துநரின் பணப் பை, பயணிச் சீட்டுக் கட்டுகளை திருடிச்சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பத்துக்கு வியாழக்கிழமை இரவு கோவையிலிருந்து வந்த அரசுப் பேருந்தில் வால்பாறையைச் சோ்ந்த செல்லத்துரை (59). நடத்துநராக இருந்தாா். இவா், கம்பம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, பயணச்சீட்டு வசூல் பணம் வைத்திருந்த பை, பயணிச்சீட்டுக் கட்டுகள், ஆவணங்கள் ஆகியவற்றை நடத்துநா் இருக்கைக்கு அருகேயுள்ள பெட்டியில் வைத்து விட்டு, கழிப்பறைக்குச் சென்றாராம்.

திரும்பி வந்து பாா்த்த போது, பயணச்சீட்டு வசூல் தொகை ரூ.10,811 பயணச்சீட்டுக் கட்டுகள் வைத்திருந்த பை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த காசிராஜனை (35) தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com