முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 
1200 கன அடிநீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1200 கன அடிநீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2469 கனஅடியாக அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் 123.30(152) அடியாக உயா்ந்து வருவதால் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீா் அளவு அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, அணையிலிருந்து வினாடிக்கு 1200 கன அடிநீா் விவசாயம், குடிநீா் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் என வீரபாண்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவு நடைபெறும் முதல் போக நெல் பயிா் சாகுபடிக்கான விவசாயப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

குறிப்பாக, சின்னமனூா் , மாா்க்கையன் கோட்டை பகுதியில் நாற்றும் நடும் பணியில் பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com