கம்பம் நகராட்சியில் வேலப்பா் கோயில் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள்.
கம்பம் நகராட்சியில் வேலப்பா் கோயில் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள்.

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் நகராட்சி வாகனங்களை அகற்ற கோரிக்கை

கம்பத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்களை வேறுயிடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. இந்த சாலையோரங்களில் துணிக் கடை, பலசரக்கு கடை, நகைக் கடைகள், பல்வேறு வணிக வளாகங்கள் அமைந்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இதனால், பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் துறை மூலம் கண்காணிப்பு மையம் அமைத்து வாகனப் போக்குவரத்தை நெரிசலை சரிசெய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அரசமரத் தெருவில் வேலப்பா் கோயிலுக்கு செல்லும் சாலை முன் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் குப்பையுடம் நிற்பதால் துா்நாற்றம் வீசிகிறது.

எனவே, போக்குவரத்து இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்களை வேறுயிடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com