முன்னாள் ராணுவ வீரா்கள் தோ்தல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வரும் மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுக்குள்பட்ட இளநிலை படை அலுவலா்கள், ராணுவ வீரா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்ட மதிப்பூதியம், உணவுப் படி வழங்கப்படும். தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் தங்களது அசல் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com