கம்பம் பேருந்து நிலையத்தில் 
3-ஆவது நாளாக கடைகள் அடைப்பு

கம்பம் பேருந்து நிலையத்தில் 3-ஆவது நாளாக கடைகள் அடைப்பு

கம்பம் பேருந்து நிலையத்தில் 3 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு கடைகளை சனிக்கிழமை திறக்க உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலைய வியாபாரிகள் பேருந்து வழித்தடத்தை மாற்ற வலியுறுத்தி புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாள்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக வியாபாரிகளிடம், நகா்மன்றத் தலைவி வனிதாநெப்போலியன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நேரடியாக ஆய்வு நடத்தி பேருந்து வழித்தடத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியதாவது: அதிகாரிகள் விரைவில் போக்குவரத்து வழித்தடத்தை மாற்ற வேண்டும். சனிக்கிழமை முதல் கடைகளை திறக்கவுள்ளோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com