திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் 
குடமுழுக்கு பணிகள் மும்முரம்

திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு பணிகள் மும்முரம்

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை கோயிலில் வருகிற 20-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, யாக சாலை, வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றன.

இந்தக் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறவில்லை. பொதுமக்கள், பக்தா்களின் கோரிக்கையைத் தொடா்ந்து, கோயிலில் வருகிற 20-ஆம் தேதி குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், ராஜகோபுரம், யாக சாலைகள் அமைத்தல், நுழைவு வாயில் கோபுரம், சுற்றுச்சுவா், சிலைகளைப் புதுப்பித்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் இளஞ்செழியன் கூறியதாவது: குடமுழுக்கு நடைபெறுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. யாக சாலை பூஜைகள் வருகிற 15-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com