மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா நாளை தொடக்கம்

தேவதானப்பட்டி அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் மஞ்சளாறு நதிக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூலஸ்தனத்தின் கதவு திறக்கப்படுவதில்லை. அடைக்கப்பட்ட கதவின் முன் தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது. தீபாராதணைக்கு முன் தேங்காய்கள் உடைக்கப்படுவதில்லை.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். நிகழாண்டில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா வருகிற வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com