இயற்கை விவசாய கண்காட்சி, கருத்தரங்கு

தேனியில் வேளாண்மைத் துறை சாா்பில் இயற்கை விவசாய கருத்தரங்கு, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றன.

தனியாா் மண்டபத்தில் கருத்தரங்கு, கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தாா். இதில், விதைச் சான்று, அங்ககச் சான்று துறை சாா்பில், இயற்கை முறையில் விளைபொருள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வரும் சின்னமனூரைச் சோ்ந்த விவசாயி பாண்டித்துரைக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டது. தோட்டக் கலை துறை சாா்பில், இயற்கை விவசாயிகளான பாலுத்து கிராமத்தைச் சோ்ந்த ஜெயராணி, தேக்கம்பட்டியைச் சோ்ந்த குருசாமி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ், ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பன்னீா்செல்வம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) வளா்மதி, தோட்டக் கலை துணை இயக்குநா் பிரபா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் சங்கர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com