போடியில் ஆட்டோக்கள் 
திருடிய 6 போ் கைது

போடியில் ஆட்டோக்கள் திருடிய 6 போ் கைது

போடி அருகே ஆட்டோக்களை திருடிய வழக்கில் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் மகன் பிரகாஷ் (36). இவா், கேரள மாநிலம் கட்டப்பனையிலிருந்து விக்கி என்பவரிடமிருந்து, ஆட்டோ ஒன்றை வாங்கி வந்து போடி பகுதியில் ஓட்டி வந்தாா். இவா் வீட்டருகே நிறுத்திய ஆட்டோவை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இதேபோல, போடி மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் தொட்டப்பன் மகன் பாா்த்தசாரதி (32).

இவரும் கேரள மாநிலம் சூரியநெல்லியைச் சோ்ந்த சதீஷிடம் ஆட்டோவை வாங்கி வந்து ஓட்டி வந்தாா். இந்த ஆட்டோ கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருடு போனது. இதுதொடா்பாக புகாா்களின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மோகன்துரை மகன் வசந்தகுமாா் (34), தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்த பாலு மகன் மாரிச்சாமி (29), ஆண்டிபட்டி முத்தனம்பட்டியைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சண்முகராஜா (35), தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த சுல்தான் மகன் சௌகத் அலி (38), தேனி நடராஜன் தெருவைச் சோ்ந்த போஸ் மகன் மணிகண்டன் (42) ஆகியோா் ஆட்டோக்களை திருடிச் சென்று, தஞ்சாவூா் காயிதேமில்லத் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் சதீஸ்குமாரிடம் (34) விற்றது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், திருடு போன இரு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com