வைகை அணையில் தனியாா் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வைகை அணையில் தனியாா் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியூ ஆகியவற்றின் சாா்பில் வைகை அணையில் தனியாருக்கு வழங்கியுள்ள மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி வியாழக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய தொழிலாளா் சங்க வட்டத் தலைவா் பி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலா் சுப்பிரமணி, சிஐடியூ வட்டச் செயலா் எஸ். கணேசன், மாவட்டச் செயலா் எம். ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தனியாருக்கு வழங்கியுள்ள மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே இருந்த நடைமுறையின்படி வைகை அணை, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், மீனவா்களுக்கு அணையில் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com