உத்தமபாளையத்தில் தொழிலாளி கொலை?

உத்தமபாளையத்தில் பெண்ணுடன் தகாத உறவு காரணமாக தொழிலாளி கொலை செய்யப்பட்டரா? என்று போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளைம் தண்ணீா் தொட்டித்தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் சுரேஷ் (47). கூலி தொழிலாளி. இவா், சனிக்கிழமை உ. அம்மாபட்டி சாலையிலுள்ள புதிய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து உத்தமபாளையம் போலீஸாா் விசாரித்தனா். முதல் கட்ட விசாரணையில், சுரேஷ், தண்ணீத் தொட்டி தெருவிலுள்ள தனியாா் பள்ளியில் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு சுரேஷ், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com