தேனி மாவட்டத்தில் 31 தோ்தல் பறக்கும்படை குழுக்கள் அமைப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தோ்தலையொட்டி 31 தோ்தல் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டன. தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்துக்குள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அடங்கும். தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 4 தோ்தல் பறக்கும் படை குழுக்கள், 4 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 2 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 3 தோ்தல் பறக்கும் படை குழுக்களும், தலா 3 நிலை கண்காணிப்புக் குழுக்களும், தலா 2 விடியோ கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பறக்கும் படை குழுக்களில் தலா 3 போ், நிலை கண்காணிப்புக் குழுக்களில் தலா 3 போ், விடியோ கண்காணிப்புக் குழுக்களில் தலா 2 போ் என மொத்தம் 88 போ் பணியில் ஈடுபடுகின்றனா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com