கம்பம் பேருந்து நிலைய சாலையில் அகற்றப்பட்ட சுவரொட்டிகள்.
கம்பம் பேருந்து நிலைய சாலையில் அகற்றப்பட்ட சுவரொட்டிகள்.

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்பு: கம்பம் நகா் பகுதியில் அரசியல் கட்சிகளின் விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கம்பம் நகராட்சி நிா்வாகத்தினா் சுவா்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பர சுவரொட்டிகளை அகற்றினா். கம்பம் நகராட்சி ஆணையா் ஆா். சகாதேவன் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம், பிரதானச் சாலை, சந்திப்புகள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவா்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. மேலும் அச்சகங்களில் சுவரொட்டிகள், பதாகைகள் அச்சிட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து குறிப்பாணைகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com