மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , போடியிலிருந்து கேரளா செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினா்
மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , போடியிலிருந்து கேரளா செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினா்

மக்களவைத் தோ்தல்: எல்லைப் பகுதியில் பறக்கும்படையினா் சோதனை

மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையை தொடங்கினா். தேனிமாவட்டம், போடி பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. போடி வட்டாட்சியா் மணிமாறன் உத்தரவின்பேரில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பணம், பரிசுப் பொருள்கள், தங்க நகைகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிா, இவற்றுக்கு முறையான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என பறக்கும்படையினா் சோதனையிட்டனா். சோதனை செய்யும்போது விடியோ பதிவு செய்யப்பட்டது. போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com