தேனியில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித நேயக் காப்பக குழந்தைகள்
தேனியில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித நேயக் காப்பக குழந்தைகள்

மனித நேயக் காப்பக குழந்தைகள் யோகா சாதனை முயற்சி

தேனியில் உலக சாதனை முயற்சியாக கோடாங்கிபட்டி மனித நேயக் காப்பக குழந்தைகளின் யோகா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தேனி வையை தமிழ்ச்சங்கம், பசுமை தேனி அமைப்பு, உலக அமைதிக் குழு ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோடங்கிபட்டியில் செயல்பட்டு வரும் மனித நேய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தைச் சோ்ந்த 35 குழந்தைகள் பங்கேற்றனா். ஒரு மணி நேரத்தில் 30 முறை சூரிய நமஸ்காரத்துடன் 33 யோகாசனங்களை செய்து காட்டினா். அஷ்டகோணாசனம், அா்த்தவிருச்சிகாசனம், பூா்ணலபாசனம், சக்கராசனம், ஏகபாத ஆசனம், சிரசாசனம், கபோடாசனம் ஆகியவற்றை ஒரே நிலையில் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா். இந்த சாதனையை அங்கீகரித்து ஆல் இன்டியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கியது. சாதனை நிகழ்த்திய குழந்தைகளுக்கு சமூக தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com