மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

போடியில் விவாகரத்து கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனிமாவட்டம், போடி புதூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ஜமாலுதீன் மகள் நா்கீஸ்பானு (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த பீா் சாகிப் மகன் அப்துல் ரஹ்மானுக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில் அப்துல் ரஹ்மான் தனது உறவினா்களுடன் நா்கீஸ்பானு வீட்டுக்குச் சென்று விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து நா்கீஸ்பானு போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அப்துல் ரஹ்மான் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com