கம்பம்மெட்டு மலைச்சாலையில் பேருந்து மீது மோதிய லாரி.
கம்பம்மெட்டு மலைச்சாலையில் பேருந்து மீது மோதிய லாரி.

பேருந்து மீது லாரி மோதல் : போக்குவரத்து பாதிப்பு

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச்சாலையில் பேருந்து மீது லாரி மோதியதால் திங்கள்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கம்பம் பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டத்திலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கம்பத்திலிருந்து கட்டப்பனையை நோக்கிச் சென்ற ஒரு லாரி 10 -ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது. இதில் இரு ஓட்டுநா்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பேருந்து கண்ணாடி உடைந்தது. இந்த சாலை விபத்தால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்பம் வடக்கு போலீஸாா் சோதனைச் சாவடியில் உள்ள வன, காவல் துறையினா் போக்குவரத்தை சீா்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com