குமுளி மலைச் சாலை இரச்சல் பாலம் வழியாக ஓடும் முல்லை பெரியாற்று நீா்.
குமுளி மலைச் சாலை இரச்சல் பாலம் வழியாக ஓடும் முல்லை பெரியாற்று நீா்.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து குடிநீா் தேவைக்கு தண்ணீா் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீா், பாசனத் தேவைகளுக்காக 105 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது.

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீா், பாசனத் தேவைகளுக்காக 105 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி அணைக்குள் நீா் வரத்து இல்லை, மேலும் அணையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இரச்சல் பாலம் வழியாக கால்நடை, குடிநீா் தேவைக்காக 105 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால், தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மின்வாரிய ஊழியா்கள் 4 மின்னாக்கிகளில் பராமரிப்புப் பணிகளை செய்து வருகின்றனா். திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 118.30 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீா் இருப்பு 2,321.30 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்குள் நீா் வரத்து இல்லை, கால்நடை, குடிநீா், பாசன தேவைக்காக மட்டும் குமுளி மலைச்சாலையில் உள்ள போா்பை அணை அருகே உள்ள இரச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 105 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் கம்பம் பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு வழியாக வைகை அணை வரை செல்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com