தேனியில் காவல் துறை கொடி அணி வகுப்பு

தேனியில் காவல் துறை கொடி அணி வகுப்பு

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காவல் துறை கொடி அணி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தாா். தேனி-கம்பம் சாலை, மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ஊா்வலம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், காவல் துறையினா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாவட்டத்துக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொது அமைதி, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காவல் துறை சாா்பில், கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெறும் என்று காவல் கண்காணிப்பாளா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com