கல்லூரியில் ரத்த சோகை தடுப்பு முகாம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் ரத்த சோகை தடுப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இந்த முகாமை கல்லூரி முதல்வா் சி.வசந்தநாயகி தொடங்கிவைத்தாா். முகாமில் அரசு மருத்துவா்கள் வினோத்குமாா், ரூபா காளீஸ்வரி, பல் மருத்துவா் சிவபிரபு உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு ரத்த மாதிரிகளை சேகரித்தனா். ரத்த சோகை நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இந்த நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினா். முகாமை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கி.தமிழ்மாறன், மாணவா்கள் ஒருங்கிணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com