வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மாா்ச் 24-இல் தோ்தல் பயிற்சி வகுப்பு

தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வருகிற 24-ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

ஆண்டிபட்டி வேளாங்கன்னி மாதா மெட்ரிக் பள்ளி, போடி ஜ.கா.நி.மெட்ரிக் பள்ளி, தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளி, வீரபாண்டி கலை, அறிவியல் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. சம்மந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்தல் பயிற்சி வகுப்பில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com