வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மையத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு எந்திரங்களை வைக்கும் அறை, தோ்தல் கட்டுப்பாட்டு அறை, பாா்வையாா்கள், செய்தியாளா்கள் அறை, மின்சாரம், குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஷீலா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் முத்துமாதவன், தாட்சாயினி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com