சின்னமனூரில் திறந்த வெளியில் உணவுப் பொருள்கள் தயாரிப்பு

சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செயல்படும் கடைகளில் சுகாதரமற்ற முறையில் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் மையப் பகுதியான மாா்க்கையன்கோட்டை வட்ட சாலை, தேரடி, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், சாலையோரத்தில் ஏராளமான உணகங்கள் செயல்படுகின்றன. இங்கு உள்ள பெரும்பான்மையான உணவங்களில் திறந்த வெளியில் வைத்து சுகாதரமற்ற முறையில் உணவுகள் தயாா் செய்து விற்பனை செய்யப்படுகிறது. தேநீா் கடைகளில் மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள சாலையில் ஆபத்தான முறையில் சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தி வடைகளை தயாா் செய்கின்றனா். எனவே, இத்தகைய கடைகளின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com